மாமா: என்ன மாப்பிள்ளை ??… காலையிலே எங்க கிளம்பிடீங்க அதுவும் சொம்பை தூக்கிட்டு ??
மாப்: இல்ல மாமா , சாமிக்கு மார்கழி முப்பது நாளும் காலையிலே தண்ணி விடுறதா வேண்டுதல்
மாமா : ஓஓ.. ! சரி சரி … ஊத்துறது ஊத்தறிங்க கொஞ்சம் பெரிய குடத்துலே தான் கொண்டு போயி ஊத்தறது ..நம்ம ஊருலே தான் தண்ணிக்கு பஞ்சமே இல்லியே
மாப் : அதுவா…. நெறைய ஊத்தினா சாமிக்கு குளிருமில்லே … அதான் சின்ன குடம்
மாமா : அப்போ சுடு தண்ணி கொண்டு போயி ஊத்த வேண்டியது தானே ………………..
மாப் : ??????????????
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நனவாவதை பற்றி
என் கனவுகள் யோசித்ததே இல்லை
நம்பிக்கையை மட்டும்
கை விட்டதேயில்லை
எல்லா கோயில்களிலும்
எந்த கடவுளை தொழும் போதும்
என் மனதின் வேண்டுதல் ஒன்றே
வாழ்நாள் முழுக்க
என் எதிரே நீயிருக்க வேண்டும்
எதிரியாகவே ஆனாலும்…. எதிரில் நீயிருக்க வேண்டும்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நீ அழுதால்
என் சோகம் கூட
பெரிதாக தெரிகிறது
நீ சிரித்தால் தான்
என் சந்தோசம் கூட நிலைக்கிறது
நீ தட்டி கொடுத்து
பெருமிதப்படும் போதுதான்
என் வெற்றிகள் கூட புரிகிறது …
அதில் எப்போதும்
நீயும் ஒன்றென……………..
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஒவ்வொரு முறையும் வேலைக்கான தேர்வுகளுக்கு சென்று திரும்பி வருகையில் “ஏன்டா வருத்தப்படறே ,நீ படிச்சியே அந்த ஸ்கூல்-ஐ சுத்தி வரட்டி வித்தவன் நானு. நானே நினைக்கலே உங்களை(அவர் பிள்ளைகள்) எல்லாம் அங்கே படிக்க வைப்பேன்னு ..உங்களுக்கு எல்லாம் என்னடா கொறைச்சல் ?படிச்சிருக்கீங்க , நல்ல அறிவு இருக்கு இன்னிக்கி எங்கே வேலைக்கு போனாலும் மாசம் 3 ஆயிரத்துக்கு கொறவு இல்லாமே சம்பளம் வாங்கலாம்… நீ ஏன்டா மனசை தளர விடறே..3 ஆயிரம் போதும்டா காலுக்கு போயி தலைக்கு வருமடா
அன்னிக்கெல்லாம் ஒரு படிப்பும் இல்லாமே, காசு பணம் இல்லாமே ,2.50 கூலிக்கு போனப்ப கூட நம்பிக்கை ஒன்னு மட்டும் தான்டா வச்சு பாடுபட்டோம் .தைரியமா இரு “
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
உலகின் மிக பெரிய விஷயங்கள் எல்லாம்
சின்ன சின்ன நம்பிக்கைகளில் தான்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது -அடுத்த நிமிடம்
உயிர் வாழ்வது முதல் – ஆயுள் முழுவதும்
உன்னோடு வாழ போவது வரை
ஆழம் புரியாத கிணற்றுக்குள்
அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிற
ஒரு நூலை பிடித்து கொண்டு
நான் சிரிப்பதை போல
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
மனம் பழக்கங்களின் அடிமை … !!!!!!!!!!!!
இதோ ..
பள்ளி காலத்தில் இருந்து
கவனித்து பாருங்கள் புரியும்
இரண்டு மாத விடுமுறை முடிந்து …
பள்ளிக்கு போவதற்கு சிணுங்கும் ..
படித்த பள்ளியை ,கல்லூரியை
பழகிய மனிதர்களை ..என
ஒவ்வொரு பிரிவிலும் ,
ஒவ்வொருவரை பிரிகையிலும்
கண்ணீர் வடிக்கும் …
இது ….வெகு நாட்களாய் பழகிவிட்ட பின் …
புதியதை சந்தித்து
ஒரு புதிய ஆரம்பத்தை தொடங்குவதற்கு
தயங்கி நிற்கும் ……
பழக்கத்தில் சுகம் கண்ட சோம்பேறி ..மனம் …
மரணத்தையும், காலத்தையும் தவிர
பெரியதொரு மாற்றங்களை ………….
முயற்சியுள்ள மனதுக்கு
எவரும் ,எப்பொழுதும்
கொடுத்து விட முடியாது என்ற
உண்மை தெரிந்தாலும்…
காரணங்களை பிடித்து கொண்டே
கவலைகளில் மூழ்கி திளைக்கும்
வயது ஏற ஏற
கடந்த காலத்தை ….வசந்த நினைவுகளை
திரும்ப திரும்ப பேசி…….
நிகழும் காலத்தில் நடப்பவைக்கெல்லாம்
புகார் பட்டியல் வாசித்து நிற்கும்….
எடுத்ததற்கெல்லாம் எதிர்காலத்தை நினைத்து
கலங்கி நிற்கும் …
வாலிபத்தில் ,குழந்தை பருவத்துக்கும்
வயோதிகத்தில் ,வாலிபத்துக்கும்
ஆசைப்பட்டே அழிந்து போகும்
கடந்த காலத்தின்
தோல்விகளில்… மோதி மோதியே
காயம்பட்டு ………
இம்மியளவும் முயற்சிக்காது
காப்பாற்ற ஆள் தேடி …..
அதிர்ஷ்டத்தை …அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கும்
கீரைகாரியிடம் பேரம் பேசும் மனம்
கௌரவத்துக்காய் கணக்கு பார்க்காமல்
Pizza hut-களில் பணம் கட்டி வரும்
யாரில்லாமலும் ………….யாரும் வாழத்தான் வேண்டும் என்பதை மறந்து நானில்லாமல் இவர்கள் என்ன செய்வார்கள்
அவர்கள் என்ன செய்வார்கள்??? … என்ற நினைப்பை எடுத்து
தனது கோழைத்தனம் மறைத்து நிற்கும் ………..
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து நினைத்தே நேசிப்பவரை நெருக்கடிக்கு உள்ளாக்கும்
ம்ம் என்றால் நம்பிக்கை இழந்து விட்டு
இயலாமையின் தோள்களில் சாய்ந்து கொள்ளும்
இள ரத்தம் ஓடுகையில் …
முதியோரின் காரணம் கேட்டறியாத
கண்மூடித்தனமான பின்பற்றுதல்களை
கேலி செய்யும்
அதே மனம்…
முதுமையில்…
பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காது….
பற்றி கொள்ள ஒரு நம்பிக்கை தேடும்…
வீட்டுக்குள் தொலைத்ததை எல்லாம்
வாசலில் தேட …….
புகழ்ச்சிக்கு ,மரியாதைக்கும் மயங்கி ….
எட்டியே நில் என்று எவரையும் சொல்லாது
எல்லார்க்கும் இடம் கொடுத்து விட்டு
நெருக்கடியில் மாட்டிக்கொண்ட பின்
நினைத்தவரை எல்லாம் குற்றம் சாட்டி
நீதிமானாய் காட்டி கொள்ளும்
பெரிய அளவில்
புத்திசாலிதனமாய் ஏமாற்றுபவர் கண்டால்
ஏமாந்ததை கூட
யாருமறியாமல் மறைத்து கொள்ளும் . .
சிறிய அளவில் செய்து
அகப்பட்டவனையோ …..அடித்தே கொள்ளும்
அடுத்தவருக்கென்று அறிவுரைகள் வகுத்தாலும்
தனக்கென்று வருகையில்
தடுப்புகளை கூட உடைத்தெறிந்து
ஓட தயாராகும்
எல்லாரிடத்தும் முக்கியத்துவம் தேடும்
ஏகபோக அரசியல்வாதி
வேலை இருக்கும் போதெல்லாம்
ஒய்வு தேவை என்று
ஓயாது புலம்பும்
சும்மா இருக்கும் போதோ.
ஓய்வை யோசிக்காது ..
ஒவ்வொரு
திங்கள்கிழமை காலையும்
அலுவலகம் போகையில்
ஞாயிற்றுகிழமை வீணாய் போனதாய்
விளம்பரப்படுத்தி கொண்டிருக்கும்
ஊரெல்லாம் ஓடி
உலக அறிவெல்லாம் கற்று
உள்ளுக்குள் கவனியாது .. வாயாடி கொண்டிருக்கும்
செத்த பின்னால் என்னாவோம் என்ற பயத்தோடு
கடவுள் வந்து கண்ணை குத்துவதாய்…..
காவி கட்டியவனிடமெல்லாம்
தேடி தேடி ..கதை கேட்கும்
சொன்னவரை எல்லாம் தெய்வம் என்று மதிக்கும்
உயிரோடு இருக்கும் போது
உருப்படியாய் வாழ நினைக்காது.. !!!!!!!!!!!
-பூந்தென்றல்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
எந்த ஒரு இடத்திலும்
எத்தனை
பிரியமான ஒருவருடைய இழப்பை ,பிரிவை
எதிர்கொள்ளும் போதும் ..
கட்டுபாடின்றி ஓரிரு நிமிடங்கள்
நீ அழுது விட்ட போதும் …
எப்போதும் பேசும்
உன் வார்த்தைகள் மட்டும் நினைவுக்கு வருகிறது ..
எவரை பிரிந்தாலும்
எந்த ஒரு மரணத்தை
கண் எதிரே சந்திக்கும் போதும் ..
யாரேனும் கதறி கொண்டிருக்கும் போதும்
சர்வசாதாரணமாய்
அனுபவசாலிகள் தோற்க
அழகாய் நிதர்சனம் பேசுவாய் …
“கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும் ..
அப்புறம் போக போக சரி ஆகிவிடும்
மனதுக்கு மறந்து… மரத்தும் விடும் ………..”
உனக்கு தெரியுமா .. ???
அப்போதெல்லாம் நான் வியந்திருக்கிறேன் ….
நீ பெற்ற அனுபவம் எப்படி பட்டதென்றும் …
உன் காயங்கள்
எத்தனை கொடிதென்றும்
ஆனால் .. எல்லாம் சொன்னாயே ..
முக்கியமானதொரு உண்மை புரிய மறந்தாயோ
உன்னை போல்
அனுபவங்கள்-அறிவு கொண்டிருக்கவில்லை ..
நீ தான் என் அனுபவமே …..
உன்னாலே கிடைத்த கிரீடங்கள்
எத்தனை புதிதோ !!!!!
அதே அளவு
எனக்கு ….என் அழுகையே புதிது ….
நானும் சொல்கிறேன் .. கேள் ..
நீ அருகில் இல்லாதது ..
இந்த பிரிவுகள் ….
பெரிய இழப்பாய் இல்லை ..தான்
தானே செத்த பின்
தனக்காய் அழ முடியாது என்பதால் …
ஒவ்வொரு உயிரின் மரணத்திலும்
உரிமை தனிமை,
ரத்தபாசம் ,நேசம் நெருக்கம் என
கணக்கில்லாத காரணங்களால்
கண்ணீர் விட்டாலும்
மனிதன்
தன் மரணத்தை நினைத்து
தனக்காகவும் ….ஓரிரு நிமிடங்கள் அழுவதை போன்றது
என் உண்மை
நீ என்னையோ .. அல்லது
நான் உன்னையோ ..
மறந்து விட போவதற்காக அழவில்லை…
மரங்கள் அடர்ந்த சாலையில்
எதிரெதிரே சந்தித்து கொண்ட போதும்
மறந்ததாய் நடித்து ..கண்டுகொள்ளாமல்
அவசரமாய் கடந்து போக வேண்டி இருக்குமே என்றுதான்
இந்த அழுகை …
சற்று முன்னதாகவே …
அப்போது கண்ணீர் விட
சில கட்டாயங்கள் இருக்குமென்றாலும் ………..
அது போக
பிரிந்து போன இடத்திலா .. சந்திக்க போகிறோம் …
இல்லை ..பல்லாயிரம் மைல்கள் கடந்து …
உருவங்கள் , ரசனைகள் … மாறி …
புதிய உறவுகளோடு ….
ஒருவரை ஒருவர் அடையாளம் கண்ட பின்னும்
தேடிக்கொண்டே இருப்போம் …
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
நீ
என் அருகில் இருக்கும் போது மட்டும்
நான் எழுதுவதில்லை
ஏன் எனில்
படிக்கும்பொழுது எழுத
நான் பழகவில்லை
உன்னை போன்ற கவிதையை !!!!!!
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »
நான் ரசித்து ஆசைப்பட்டு
வாங்கும் பொருட்கள் எல்லாம்
உனக்கே பரிசளிக்கிறேன்
உன்னை ரசிப்பதும், நேசிப்பதுமான
தவங்கள் முன்னால்
அவைகள் சாதாரணம் என்பதை
எவைகளுக்கும் சொல்ல !!!!!!!!!!!!!!!!!!!!
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »