கல்யாணம் என்பது குதிரை பந்தயம் மாதிரிவாழ்கையை பணயம் வைத்துஇருவர் இணைந்துதத்தம் கனவுகளைதுரத்தி கொண்டு ஓடும் ஓட்டம்
நீண்ட பயணம் …இலக்கு எதுவென்றும்எதுவரை என்பதும்ஓடுபவருக்கும் ,ஒட்டுபவருக்கும் தெரியாத புதிர்
ஒன்றாய் ஓடுவது மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது…நீங்கள் யாரோடு ஓடினாலும்கணக்கில் வைத்து கொள்ளவேண்டியதுகாதலும், நம்பிக்கையும் தான்–அடுத்தவரின்கடந்த காலம் அல்ல
வெற்றி , தோல்வி எல்லாம்வேகமாய் முந்தி கொண்டு செல்பவர்க்கு அல்லவேதனையோ ,சாதனையோமாறாத அன்பும் – அதை மறக்காது சொல்லவும்மற்றவரிடம் செலுத்தவும் செய்கிற அதிர்ஷ்டசாலிகளுக்கே
நொண்டி குதிரையோசண்டி குதிரையோசிலருக்கு எதுவாயினும் ஓட்ட [...]
‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு
ரூம் போட்டு யோசிச்சு ..கல்யாண ஸ்பெஷல் கிறுக்கல்கள்
Posted in Uncategorized on மே 23, 2009 | Leave a Comment »
என் முதல் நட்பு ..
Posted in Uncategorized on மே 18, 2009 | Leave a Comment »
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்…. மாலை வேளைகளில் வீட்டில் இருந்த எருமை மாடுகள் இரண்டையும் பக்கத்தில் இருந்த ரயில்வே யார்டுக்கு … மேய்த்து கொண்டு வர ,அம்மா ஓட்டி போயி விடுவார்கள் …நடுவில் வீட்டு வேலை செய்ய வர வேண்டுமெனில் என்னை தான் அழைத்து , கொஞ்ச நேரம் எருமைகளை பார்த்து கொள்ள சொல்வார்கள் ..
கூட்ஸ் ரயில்கள் மட்டுமே செல்லும் பாதை….ஆதலால் கூட படிப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் [...]
வள்ளுவர் கோட்டமும் ….வள்ளியம்மாவின் மகளும் (நான்தான் அது)
Posted in Uncategorized on மே 18, 2009 | Leave a Comment »
ஜனவரி மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை ……நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு வெகு அருகில் தான் வள்ளுவர் கோட்டம் இருந்தது…எங்களுக்கு பிடித்தமானது பெசன்ட் நகர் பீச் என்றாலும்… எப்போதும் கூட்டமாய் வரும் பஸ்சின் நெரிசலில் மிதிபட்டு…போயி சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்சரி .. பஸ்சுக்கு செலவழிக்காமல் போவது தானே …என்று கிளம்பி ஆயிற்று …டிக்கெட் வாங்கி கொண்டு ,உள்ளே போயி பார்த்தால் வழக்கம் போல் …நம் மக்கள்(சகாக்கள்) யாரும் வரவில்லை …சரி என்று [...]
மரணம் பொய் ஆவதில்லை – இரண்டாம் பாகம்
Posted in Uncategorized on ஏப்ரல் 20, 2009 | Leave a Comment »
கடவுளையே நினைத்திராத மனிதர்களுக்கும்காலையும் மாலையும் இரு வேளைபூஜை செய்த பக்தனுக்கும்பொதுவானது மரணம்…..
கட்டங்கள் போட்டுவானியலும் ….மண்ணியலும்..கணித்துவருங்காலம் சொன்னாலும்இன்ன திசை …இந்த மார்க்கம்இந்த நாள் வந்து சேரும்என எவரும்எதிர்பார்க்க முடியாததுஊகங்களில் தேர் செலுத்த முடியாததுமரணம் என்கிற மாண்புமிகு நெறி
இலங்கையில் செத்தாலும்ஈராக்கில் செத்தாலும்கங்கையில் செத்தாலும்ஒவ்வொரு மரணமும்…உயிரோடிருப்பவனை பார்த்துஉயிர் கொலை தவறுசொல்,செயல் எனஅடுத்த மனிதனுக்கானவன்முறை தவறு என்பதைஉரக்க சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது
மெத்த படித்தவர் எல்லாம்மேதாவி என்ற பட்டம் கொண்டவர் எல்லாம்அடுத்தவன் மரணத்தில் அரசியல் செய்துதனக்குண்டான லாபத்தை பங்கு பிரிக்கையில்மறந்தும் யோசிக்காத நியாயம்மரணம்இவர்கள் பின்பற்றும் [...]
மரணம் பொய் ஆவதில்லை
Posted in Uncategorized on ஏப்ரல் 5, 2009 | Leave a Comment »
அமராவதி அமரர் ஆனார் — மார்ச் ,2009அமராவதி -அம்மாவின் சகோதரர்
பெண்ணாய் பிறந்ததற்காய்ஒரு நாளும் வருத்தப்படாத என்னைஇன்று வருத்தப்பட வைத்தவர்பெற்றவளை ஒரு நாளும் கண்ணீர் வடிக்க விட கூடாதுஎன்று இருந்த என்னைஎன் கடமை உணர்ச்சியைகுற்ற உணர்ச்சியாய் மாற்றித்தான் போனதுஅவர் மரணம்
கடைசியாய் ஒரே முறைஅவர் முகத்தை பார்க்காமல் போனதற்காய்நாளும் ,பொழுதும்அழுது புலம்பி ஆத்திரபடுகிறாள்எதை செய்து அவள் சோகம் தீர்க்க ??காலம் இருக்கிறது காயங்கள் ஆற்ற
மகனாய் பிறந்திருந்தால்மற்ற சாஸ்திரங்கள் அனைத்தும்தூக்கி எறிந்து விட்டுஅவள் சார்பாய் கடமை செய்ய போயிருப்பேன்செய்ய முடியாத காரியத்துக்குசொல்ல [...]
பிறந்த நாள்
Posted in Uncategorized on பெப்ரவரி 20, 2009 | Leave a Comment »
நாம் செய்து கொண்டிருப்பதை , ஓடி கொண்டிருப்பதை ஒரு கணம் நிறுத்தி விட்டு நிதானப்பட ………. இல்லாததை நினைத்து.. படும் வருத்தங்கள் நடுவே இருத்தலே இனிதென கொண்டாட காலம் கொடுக்கும் ஒரு வாய்ப்பு
சந்திக்கும் முன்
Posted in Uncategorized on ஜனவரி 19, 2009 | Leave a Comment »
நாம் சந்திக்கும் முன்உன்னை தொலைத்ததாய் நியாபகம் இல்லை எனக்குஇருந்தும் ….என்னைஏன் அடையாளங் காண முடியவில்லை உன்னால் ?
ஊரே உனக்குள் – ஜனவரி 2005
Posted in Uncategorized on ஜனவரி 19, 2009 | Leave a Comment »
எப்போது பெங்களூர் போனாலும்இப்படி ஒரு நாள் ,ரெண்டு நாள் லீவுல்யே போகிறாயே ……..ஒரே நாளுலே ஊரை சுத்தி பார்த்துர முடியுமா ???இவர்களுக்கு என்ன தெரியும் ???இந்த ஊருக்குள் நீ இருக்கிறாய் என்பது தானே இவர்கள் நினைப்பு …என்னை பொறுத்தவரை ……………………இந்த ஊரே உனக்குள் தான் இருக்கிறது … நான் என்ன ஊரை சுற்றவா வருகிறேன்…உன்னை சுற்ற தானே
சென்னை சென்ட்ரல் -அக்டோபர் 2003
Posted in Uncategorized on ஜனவரி 19, 2009 | Leave a Comment »
முதல் முறையாக சென்னை கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்த போதுநண்பன் ஒருவன் சொன்னான் ..“நாளைக்கு காலையில் சென்னை போயி இறங்க போறே… அங்கே ரயில்வே ஸ்டேஷன் ரொம்ப பெரிசா இருக்கும்… பார்த்து பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி பிரமிச்சு … நிக்காதே ..”ஆனால்அந்த அக்டோபர் மாதத்தின் காலை………….நான் சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி நடந்த போது ,பெரிய அதிசயமாய் எதுவும்என் கண்ணுக்கு தெரிந்திருக்க வில்லைகாரணம் …என்னுடன் நீ !!!!!!!உன்னை விடஎன்னைபிரமிக்க வைக்கிற ஏதேனும் ஒன்றுஇந்த உலகத்தில் இருக்கிறதா [...]
வகுப்பறையில்
Posted in Uncategorized on ஜனவரி 19, 2009 | 1 மறுமொழி »
M.Sc Maths 1st year Class-பாடம் : Sql Server 2000
அமாவாசைக்கும் ,அப்துல் காதருக்குமான சம்பந்தம் —அந்த வகுப்பு..கல்லூரியில் கட்டிய காசுக்கு…. விதியை நொந்தவாறே உட்கார்ந்திருந்தனர் . நானோ வகுப்பறையில் ..எந்த தலைப்பை எடுக்க ஆரம்பித்த போதும் கரும்பலகையில் படம் போட்டு விளக்கியும் …எழுதியும் போட்டு… பாடம் நடத்தி கொண்டிருந்தேன் …எழுதி போட்டதை அவர்கள் எல்லாம் எழுத கொஞ்சம் நேரம் கொடுத்தேன் .. பின்பு முன் வரிசையில் உட்காந்திருந்த ஒரு மாணவனை பார்த்து“போர்டு-ல இருக்கிறதை அழிச்சிரட்டுமா ? [...]