ஜனவரி மாதத்தில் ஒரு ஞாயிற்று கிழமை ……
நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு வெகு அருகில் தான் வள்ளுவர் கோட்டம் இருந்தது…
எங்களுக்கு பிடித்தமானது பெசன்ட் நகர் பீச் என்றாலும்… எப்போதும் கூட்டமாய் வரும் பஸ்சின் நெரிசலில் மிதிபட்டு…போயி சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்
சரி .. பஸ்சுக்கு செலவழிக்காமல் போவது தானே …என்று கிளம்பி ஆயிற்று …
டிக்கெட் வாங்கி கொண்டு ,உள்ளே போயி பார்த்தால் வழக்கம் போல் …நம் மக்கள்(சகாக்கள்) யாரும் வரவில்லை …
சரி என்று நுழைவாயிலை ஒட்டி இருந்த படிக்கட்டு ஓரம் உட்கார்ந்து … மற்றவர்களுக்காய் காத்திருக்க ஆரம்பித்தோம் . காத்திருந்த நேரத்தில் தான் அவள் ஆர்வமாய் சொன்னாள்..
“நாம ஏன் இங்கே நிற்கனும்?அப்டியே கொஞ்சம் நடந்திட்டு வரலாமே … அவங்க எல்லாரும் வந்தவுடனே அப்புறம் பொறுமையா உள்ளே போயி சுத்தி பார்க்கலாம் “
வாகனங்களின் இரைச்சலும் ,ஜன சந்தடியும் நிறைந்த சென்னை போன்ற நகரங்களில் இது போன்று ஒரு இடம் மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தது …
யாரும் பார்த்து பார்த்து நட்டு வைக்காமல் ….அழகுப்படுத்தாமல்….சமீபத்தில் பெய்த ஒரு மழையால் ….புற்கள் ஏராளமாய் வளர்ந்து அந்த இடத்துக்கு ஒரு பசுமையை கொடுத்திருந்தது …
காற்றும் வெளிச்சமும் சரியாய் வராத அறை ஒன்றில் தங்கி இருந்த எங்களுக்கு…..(சத்தியமாய் எனக்கு ஏதும் தோணலை… முன்னாடியே ஒத்துக்கிறேன் )மரங்களும் அந்த செடிகளும் பார்வைக்கு இதமாய் இருந்தன ….
ஏதோ கவிதை எழுதுகிற …சரி விடுங்க அவ எதுவும் எழுதினதில்லை
தியானத்தில் இருந்து திடீரென கண் விழித்த சாமியார் அவருடைய சீடனை பார்த்து …..கேட்கிற மாதிரி …ஆர்வமாய் என்னை பார்த்து கேட்டாள் “
“ரொம்ப நல்ல இருக்குல்லே “
இந்த இடத்தை பார்த்தால் உனக்கு என்ன தோனுது?”….
கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னேன்…
” எவ்ளவோ புல்லு … எங்க வீட்ல இருக்கிற எருமையை கொண்டாந்து விட்டா … எப்படி மேயும் தெரியுமா … நம்ம ஊருலே எங்க போயி இப்படி புல்லை பார்க்கிறது ……”!!!!!!!!!!!!!!!!!!!!! என நான் தொடர்ந்து கொண்டிருந்தேன் …..
(இவ்வாறு யதார்த்த சிந்தனையோடு பேசிய நான் பொழுதுபோக்காய் என்ன வேலை செய்து கொண்டிருந்தேன் என்று உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை )