முதல் முறையாக சென்னை கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்த போது
நண்பன் ஒருவன் சொன்னான் ..
“நாளைக்கு காலையில் சென்னை போயி இறங்க போறே… அங்கே ரயில்வே ஸ்டேஷன் ரொம்ப பெரிசா இருக்கும்… பார்த்து பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி பிரமிச்சு … நிக்காதே ..”
ஆனால்
அந்த அக்டோபர் மாதத்தின் காலை………….
நான் சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி நடந்த போது ,
பெரிய அதிசயமாய் எதுவும்
என் கண்ணுக்கு தெரிந்திருக்க வில்லை
காரணம் …என்னுடன் நீ !!!!!!!
உன்னை விட
என்னை
பிரமிக்க வைக்கிற ஏதேனும் ஒன்று
இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன.. ???
சென்னை சென்ட்ரல் -அக்டோபர் 2003
ஜனவரி 19, 2009 subathraa ஆல்