பெண்ணே,
என்ன இருக்கிறது உன்னிடத்தில் ?
ஏன் இந்த மனம் உன்னையே சுற்றி சுற்றி வருகிறது ?
பட்டியல் இட துவங்குகிறேன் ..!!!!!!!!
உன்னிடம் கற்றதையும் .. பெற்றதையும் தான் இட முடிகிறது ….
நீ அருகில் இருக்கும் போது
நான் உணர்வதை …எந்த தாளும் பேனாவும்
இன்னும் உருவகப்படுத்த முடியாமல் தோற்கிறது ..
ஒரு கருவறையில் உறங்குகிற நிம்மதியை ..
உன் அணைப்பு தந்திருக்கிறது …
